வவுனியா மகாறம்பைக் குளத்தில் 10 இலட்சம் ரூபா பெறுமதியான புதிய வீட்டிற்கான அடிக்கல்லினை, வன்னி பாராளுமன்ற உறுப்பினரும் வவுனியா மாவட்ட இணை தலைவருமான கு.திலீபன் இன்று நாட்டி வைத்துள்ளார்.
குறித்த வீடானது கிராமிய வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கட்டிடப்பொருட்கள் தொடர்பான இராஜாங்க அமைச்சின் கீழ் அமைக்கப்பட்டு வருகின்றது.
இத்திட்டத்தின் ஒரு கட்டமாகவே வவுனியா மகாறம்பைக்குளத்தில் பெண் தலைமைத்துவ குடும்பமான, சுதாகரன் தவறஞ்சினிக்கான வீட்டிற்கான அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வு, வவுனியா பிரதேச செயலாளர் ந.கமலதாஸன் தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது, வன்னி பாராளுமன்ற உறுப்பினரும் வவுனியா மாவட்ட இணைத்தலைவருமான கு.திலீபன், கிராமசேவையாளர் மற்றும் ஈபிடிபி கட்சியின் முக்கியஸ்தர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.






