ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்ப்பட்ட இந்து ஆலயங்களின் ஒன்றியம் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளது
முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவில் பதிவுசெய்யப்பட்ட 74 இந்து ஆலயங்களின் நிர்வாக சபை உறுப்பினர்கள் மத்தியில் இருந்து ஒட்டுசுட்டான் பிரதேச இந்து ஆலயங்களின் ஒன்றியம் அங்குரார்ப்பணம் இன்று செய்துவைக்கப்பட்டுள்ளது
குறித்த நிகழ்வு , ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் த.அகிலன் தலைமையில், ஒட்டுசுட்டான் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
இதன்போது, ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்ப்பட்ட இந்து ஆலயங்களின் ஒன்றியம் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டதோடு இந்து ஆலயங்கள் இடர்கால உதவிகளை புரிதல்,அறநெறி கல்வியை ஊக்குவித்தல்,ஆலயங்களை பிணக்குகள் இன்றி ஒற்றுமையாக கொண்டு செல்லல்,மதமாற்றத்தை கட்டுப்படுத்தல்,சமூக ஏற்றத்தாழ்வு பாராது வழிபட வழிவகுத்தல் ,வீணான ஆடம்பர செலவுகளை குறைத்து அதை மக்களுக்கு பயனுள்ளதாக மாற்றுதல்,உள்ளூர் கலைஞர்களை ஊக்குவித்தல்,வெளிப்படை தன்மையுடன் கணக்கு நடவடிக்கைகளை கையாலால் உள்ளிடட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
மேலும், இந்து ஆலயங்களுக்கான விழிப்புணர்வு விரிவுரைகளை இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.






