அவிசாவளை பென்றிக் தோட்ட மக்கள் போராட்டம்!

கொழும்பு, அவிசாவளை பிரதான வீதியில், அராஜகத்தில் ஈடுபடும் தோட்ட அதிகாரியை பதவி நீக்கம் செய்யுமாறு வலியுறுத்தி அவிசாவளை பென்றிக் தோட்ட மக்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பென்றிக் தோட்டத்துக்கு செல்லும் வழியை மறித்தே அவர்கள் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

தோட்ட நிர்வாகத்தின் அனுமதியுடன் பென்றிக் தோட்டத்தில் நிர்மாணிக்கப்பட்ட வீடொன்றை, தோட்ட அதிகாரி பலவந்தமாக உடைத்துள்ளார்.

இதனை தடுக்க முற்பட்ட வயோதிபப் பெண்ணையும் தாக்கியுள்ளனர் என மக்கள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, குறித்த வயோதிபப் பெண்ணின் மகன்மார், தோட்ட அதிகாரியை தாக்கியுள்ளனர்.

வயோதிபப் பெண்ணும், தோட்ட அதிகாரியும் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.

பொலிஸாரும் தோட்ட அதிகாரிக்கு சார்பாகவே செயற்படுவதாக மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட தரப்புக்கு நீதி வேண்டும் எனவும், குறித்த தோட்ட அதிகாரியை பணிநீக்குமாறு வலியுறுத்தியும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

Leave a Reply