முல்லைத்தீவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் நேற்றும், இன்றும் பெய்து வரும் கனமழையால் தாழ்நிலப் பகுதிகள் பல வெள்ளத்தில் மூழ்கியுள்ளன
இதனால், வீடுகள் சிலவற்றிற்குள் வெள்ளம் புகுந்து காணப்படுவதோடு வயல் நிலங்கள் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளன
ஒட்டுசுட்டான், மாந்தை கிழக்கு, துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவுகளில் அதிகளவான மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது. குறிப்பாக மாங்குளம் பகுதியில் 91 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது
இந்த மழைவீழ்ச்சி காரணமாக மாங்குளம், துணுக்காய் வீதியில் உதயசூரியன் கிராமம், கற்குவாரி 50 வீட்டுத்திட்டம், பனிக்கன்குளம் போன்ற கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.








