அரசாங்கத்தில் இருந்து நாற்பது நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அதிகமானோர் வெளியேறத் தயாராகி வருவதாக, ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியினால் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டம் தொடர்பில் கருத்துரைக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
ஐக்கிய மக்கள் சக்தியினால் 16ம் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்துக்கு பெரும்பாலான நீதிமன்றங்கள் தடை விதிக்காத நிலையிலும், பொலிஸ் மா அதிபர், நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் பொலிஸாரை பயன்படுத்தி ஆர்ப்பாட்டத்தை தடுத்ததாக ரஞ்சித் மத்தும பண்டார நேற்று (17) நாடாளுமன்றில் குற்றஞ்சாாட்டினார்.
மேலும், மக்களின் ஆர்ப்பாட்டத்தை பொலிஸாரைக் கொண்டு தடுக்கமுடியாது என எச்சரித்தார்.
இதன்போதே, அரசாங்கத்தில் இருந்து 40 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அதிகமானோர் வெளியேறத் தயாராகி வருகின்றதாக குறிப்பிட்டார்.
இவ்வாறான நிலையில் அரசாங்கத்தை காப்பாற்ற எவரும் இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், 05 வருடங்களுக்கு இந்த அரசாங்கத்தை ஆட்சி செய்ய விடப்போவதில்லை.
அமைச்சர் பசில் ராஜபக்சவும், மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்பராலும் நாட்டில் மீதியாக இருப்பதையும் இல்லாது செய்துவிடுவர்- என்றார்.






