இலங்கை 21 வயது மகளிர் கிரிக்கெட் தேசிய அணியின் 20 வீராங்கனைகளைக் கொண்ட குழாமில், யாழ். வீராங்கனைகள் இருவர் இடம்பிடித்துள்ளனர்.
அதன்படி, மகாஜனக் கல்லூரியின் முன்னாள் மாணவியும்(2019 A/L) ஶ்ரீஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் விளையாட்டு விஞ்ஞானமும் முகாமைத்துவமும் கற்கைநெறியின் முதலாம் வருட மாணவியுமான சானு பாஸ்கரன் இடம்பெற்றுள்ளார்.
இவருடன் யா/ஸ்கந்தவரோதயக் கல்லூரியின் பழைய மாணவி மதுரிகா முரளிதாசனும் தெரிவாகியுள்ளார்.
சானு பாஸ்கரன் கடந்த வருடம் இலங்கை மகளிர் உதைபந்தாட்ட தேசிய அணியிலும் தெரிவாகி தெற்காசிய உதைபந்தாட்ட வெற்றிக்கிண்ண போட்டியிலும் பங்குபற்றியிருந்தார்.
2019 இல் யா/மகாஜனக் கல்லூரி 20 வயது பெண்கள் உதைபந்தாட்ட அணி தேசியமட்ட சாம்பியனாகிய போது சானு பாஸ்கரன் விளையாடினார் என்பதுடன் இறுதிப்போட்டியில் வெற்றிக்கோல் போட்டார் என்பதும் சிறப்பம்சம் ஆகும்.
உதைபந்தாட்டம், கிரிக்கெட் என இரு துறைகளிலும் தனது அபார திறமைகளை வெளிப்படுத்திவரும் சானு 2019 A/L பரீட்சையில் சிறந்த பெறுபேற்றை பெற்று, விளையாட்டு விஞ்ஞானமும் முகாமைத்துவமும் கற்கைநெறியை விரும்பி தெரிவுசெய்து, ஶ்ரீஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தில் முதலாம் வருட மாணவியாக பயின்றுவருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.







