தடை செய்யப்பட்ட களை நாசினியுடன் சுன்னாகத்தில் கைதான இருவர்!

நாட்டிற்கு சட்டவிரோதமான முறையில் கொண்டுவரப்பட்ட, தடை செய்யப்பட்ட களை நாசினிகளுடன் சுன்னாகத்தில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விமானப்படையின் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கமைய, பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் நடத்தப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மன்னார் – வங்காலை மற்றும் யாழ். சங்கானை ஆகிய பகுதிகளை சேர்ந்த 48 மற்றும் 60 வயதான இருவரே கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களிடமிருந்து 1,251 பக்கெட்களில் பொதியிடப்பட்ட களை நாசினிகள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Leave a Reply