காணாமல் போன நபர் வெட்டுக்காயங்களுடன் சடலமாக மீட்பு!

ஹம்பாந்தோட்டை வீரக்கெட்டிய தெலம்புயாய பிரதேசத்தில், கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் காணாமல் போன நபர் இன்று (18) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த நபர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.

வீரக்கெட்டிய வேக்கந்தவல கேக்குனாய பிரதேசத்தை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான, 44 வயதுடைய அலுத் பண்டாரகே தினெத் குமார என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த நபர் கடந்த செவ்வாய்கிழமை (16) கடைக்கு செல்வதாகக் கூறிவிட்டு வீட்டிலிருந்து வெளியேறியுள்ளார்.

அதன் பின்பு அவர் வீடு திரும்பாததால் உறவினர்கள் அது தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதுடன் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் இன்றைய தினம் குறித்த நபர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

சடலத்தில் வெட்டுக்காயங்கள் பல காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply