முல்லைத்தீவு தீர்த்தக்கரைப்பகுதியில் வீதியால் சென்ற ஆறு வயதான சிறுமியை பாழடைந்த வீட்டிற்குள் இழுத்து சென்ற 17 வயதான சிறுவன் ஒருவனை இ முல்லைத்தீவு பொலிஸார் கைதுசெய்துள்ளார்கள்.
இந்த சம்பவம்இ தீர்த்தக்கரை அன்னைவேளாங்கன்னி ஆலயத்துக்கு அருகிலேயே இன்று (18) இடம்பெற்றுள்ளது.
அதன்படிஇ குறித்த சிறுமி கடைக்குச் சென்று திரும்பிய நிலையில்இ அவரை கூப்பிட்டு வாயைப் பொத்தி கொண்டு அருகிலுள்ள பாழடைந்த வீட்டுக்குள் இழுத்து சென்றுள்ளார்.
இந்நிலையில்இ கையை தட்டிவிட்டு ஓடிவெளியே வந்த சிறுமிஇ சத்தமிட்டுள்ளார்.
அதன்பின்னரேஇ அயலவர்கள் ஓடிவந்து காப்பாற்றியுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
இதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார்இ 17 வயதான சிறுவனை கைது செய்துஇ விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.






