மகிந்த பிறந்த தினத்தை முன்னிட்டு திருமலையில் விசேட பூஜை

பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் 76 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு திருகோணமலையில் விசேட பூஜை வழிபாடொன்று இடம்பெற்றது.

திருகோணமலை மாவட்ட அரச அதிபர் சமன் தர்சன பாண்டிகோராளவின் வழிகாட்டலில் , திருகோணமலை ஸ்ரீ கோணேஸ்வர கோவிலில் விசேட பூஜை வழிபாடுகள் இன்று வியாழக்கிழமை நடைபெற்றது.

நாட்டுக்கும், மக்களுக்கும்,பிரதமர் உட்பட அனைவருக்கும் ஆசி வேண்டியே இப்பூஜை வழிபாடு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது, மாவட்ட அரச அதிபர் , மாவட்ட செயலக நிர்வாக உத்தியோகத்தர் எஸ்.ஆர்.கே.எஸ்.குருகுலசூரிய, ஏனைய உத்தியோகத்தர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

காணாமல் போன நபர் வெட்டுக்காயங்களுடன் சடலமாக மீட்பு!

Leave a Reply