வவுனியாவில் உயிரிழந்த நபர் ஒருவருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
வவுனியா போதனா வைத்தியசாலையின் வெளிநோயாளார் பிரிவு ஊடாக, உயிரிழந்த முதியவரின் பிசிஆர் மாதிரிகள் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டிருந்தன.
இந்த நிலையில், யாழ்.போதனா வைத்தியசாலையில் இன்று மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் குறித்த நபருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதன்படி உயிரிழந்தவர் 73 வயதுடைய வி.சிசுபாலன் என்று மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






