போரினால் இறந்தோர் நினைவு கூறும் அழைப்பை மீளப்பெருமாறு வேண்டுகோள்

ஆயர்கள் பேரவையால் அறிவிக்கப்பட்டிருந்த போரினால் இறந்தோருக்கான நினைவு கூறுவதற்கான அழைப்பை மீளப்பெற்றுக்கொள்ளுமாறு, வடக்கு கிழக்கு சிவில் சமூகங்கள் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கம் அனுப்பியுள்ள ஊடக அறிக்கையில்,

வடக்கு கிழக்கு ஆயர்கள் பேரவையினால் அண்மையில் அறிக்கையொன்று வெளியிடப்பட்டது.

‘போரினால் இறந்தோர் நினைவு’ எனும் தலைப்பிலான குறித்த அறிக்கை பல தரப்பினருக்கும் அதிருப்தியையும், கவலையையும் தமிழ்த் தேசியத்தின் பால் சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இவ் விடயம் தொடர்பாக, வடக்கு கிழக்கு சிவில் சமூகங்களால் பல்வேறுபட்ட கலந்துரையாடல்கள் நடைபெற்றது.

இக் கலந்துரையாடலில், மாவீரர் பெற்றோர்களினதும், தமிழ் தேசியத்தின் பால் பற்றுறுதி கொண்ட பல்வேறு தரப்பினரதும் ஆதங்கங்கள், கவலைகள் மற்றும் கருத்துக்கள் என்பன ஆயர்களிடம் எடுத்துரைக்கப்பட்டது.

இந்த நிலையிலேயே, ஆயர்கள் பேரவையால் அறிவிக்கப்பட்டிருந்த போரினால் இறந்தோருக்கான நினைவு கூரலை குறிப்பிட்டிருந்த 20.11.2021 அழைப்பை மீளப்பெற்றுக்கொள்ளுமாறு, வடக்கு கிழக்கு சிவில் சமூகங்கள் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், சிவகுரு ஆதீன முதல்வரும், பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் இணைப்பாளருமான தவத்திரு வேலன் சுவாமிகள் , கிழக்கு மாகாண சிவில் சமூக செயற்பாட்டாளர்களின் இணைப்பாளரும், பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் இணைப்பாளருமான திரு.ச.சிவயோகநாதன் , மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் அதி வணக்கத்திற்குரிய ஜோசப் பொன்னையா ஆண்டகை , திருகோணமலை மறைமாவட்ட ஆயர் அதி வணக்கத்திற்குரிய நோயல் இமானுவேல் ஆண்டகை , யாழ். மறைமாவட்ட ஆயர் அதி வணக்கத்துக்குரிய ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகை, மன்னார் மறைமாவட்ட ஆயர் அதி வணக்கத்திற்குரிய இமானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை ஆகியோரை சந்தித்து, மேற்படி விடயம் தொடர்பாக கலந்துரையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply