சிலாபம் முன்னேஸ்வர ஆலயத்தில் கார்த்திகை தீப திருநாள்

பஞ்ச ஈஸ்வரங்களில் ஒன்றான வரலாற்று சிறப்பு மிக்க சிலாபம் முன்னேஸ்வரம் ஸ்ரீ வடிவாம்பிகா சமேத ஸ்ரீ முன்னைநாத சுவாமி ஆலயத்தில், கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு விஷேட வழிபாடுகள் இன்று (18) இடம்பெற்றது.

இன்று இரவு இடம்பெற்ற வசந்த மண்டப பூஜை, சாமி உள்வீதி உலா முடிந்ததும், கோவிலில் தீபங்கள் ஏற்றி பக்தர்கள் வழிபட்டனர்.

இதனையடுத்து, முன்னேஸ்வரம் ஆலய முன்பாக சொக்கப்பனை கொளுத்தப்பட்டு வழிபாடும் நடத்தப்பட்டது.

கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக குறைந்த எண்ணிக்கையிலான பக்தர்கள் இந்த தீபத் திருநாள் வழிபடுகளில் சுகாதார வழிகாட்டுதல்களை கடைப்பிடித்து கலந்துகொண்டனர்.

இதேவேளை, சிலாபம் மற்றும் உடப்பு பகுதிகளில் இந்து மக்கள் தத்தமது வீடுகளிலும் தீபம் ஏற்றி கார்த்திகை தீபத் திருநாளை அனுஷ்டித்துள்ளனர் .

Leave a Reply