அடுத்த மாதம் முதல் வரிசைகள் இல்லை

கொழும்பு, ஓக 25

ஊழியர் சேமலாப நிதியைப் பெற்றுக்கொள்வதற்கு அடுத்த மாதத்திலிருந்து வரிசைகள் இருக்காது என தொழில் அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

டிஜிட்டல் தொழில்நுட்ப வசதிகளைக் கொண்டு ஊழியர் சேமலாப நிதியைப் பெற்றுக்கொள்வதை இலகுபடுத்தப்போவதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

ஊழியர் சேமலாப நிதியைப் பெற்றுக்கொள்வதற்கான விண்ணப்பங்களை கையளிப்பதற்கு இணையம் ஊடாக முன்பதிவு செய்துக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். 

Leave a Reply