
அடுத்த மாதம் முதல் இலங்கை இருளில் மூழ்கும் என்று மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி எச்சரித்துள்ளார்.
எதிர்வரும் டிசெம்பர் மாதம் 5 ஆம் திகதி இலங்கைக்கு எரிபொருள் கப்பல் வரும் என்று அரசு உறுதியளித்த போதிலும், அதற்கு செலுத்துவதற்கு போதிய டொலர் அரசிடம் இல்லை.
பழுது நடவடிக்கை காரணமாக சப்புகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையம் மூடப்படவில்லை. கச்சா எண்ணெய்க்கு செலுத்த வேண்டிய டொலர் இல்லாத காரணத்தால் தான் மூடப்பட்டுள்ளது.
இதனால் விமான நிலையத்துக்கான எரிபொருள் நிறுத்தப்பட்டு, விமான சேவைகளும் நிறுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.





