2022ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்துக்குள் பொருட்களுக்கான விலைப் பிரச்சினை தீர்க்கப்படும் என்று இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.
தற்போதுள்ள பொருட்களின் விலை தொடர்பான பிரச்சினை, கொரோனா நிலைமையின் விளைவாகும் என்றும், இது உலகளாவிய பிரச்சினையாகும் என்றும் குறிப்பிட்டார்.
அரசுக்கு வருவாயைப் பெறுவதற்கான வழிகள் மற்றும் விலை ஏற்ற இறக்கங்களை நிர்வகிப்பதற்கான வழிகளை நிதி அமைச்சர் எடுத்துக்காட்டியுள்ளார்.
எனவே 2022ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்துக்குள் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும் என்றும் மேலும் கூறினார்.






