பிள்ளைகளுக்கு காய்ச்சல், இருமல் காணப்படுமாக இருந்தால் அவர்களை பாடசாலைகளுக்கு அனுப்ப வேண்டாம் என இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்ணான்டோ புள்ளே பெற்றோர்களிடத்தில் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள இராஜாங்க அமைச்சர்இ
கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் சிறிதளவேனும் நாட்டில் இனங்காணப்பட்டால் அவர்கள் தொடர்பில் ஆராய்ந்து வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றே ஜனாதிபதி சுகாதாரத் தரப்பினருக்கு அறிவுறுத்தியுள்ளார்
குறிப்பாக பாடசாலைகளில் மாணவர்கள் எவருக்காவது கொரோனா வைரஸ் தொற்றுக்கான அறிகுறிகள் காணப்பட்டால் அந்த மாணவர்களை அவர்களது பெற்றோரிடம் அதிபர், ஆசிரியர்கள் உடனடியாக ஒப்படைக்க வேண்டும் என்றார்.
பிள்ளைகளுக்கு இருமல், காய்ச்சல் காணப்படுமாக இருந்தால் அது கொரோனா வைரஸ் தொற்றுக்கான அறிகுறியாக இருக்கலாம்.
அவ்வாறான அறிகுறிகளைக் கொண்ட பிள்ளைகளை பாடசாலைகளுக்கு அனுப்ப வேண்டாம் எனவும் பெற்றோர்களிடத்தில் வலியுறுத்தினார்.






