கண்ணம்மாவாகக் கடைசி வீடியோ.! ரோஷினி ஹரிப்ரியன் வீடியோ வைரல்.!

விஜய் தொலைக்காட்சியில் பாரதி கண்ணம்மா சீரியல் கடந்த சில வருடங்களாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. இந்த சீரியலில் கண்ணம்மா கதாபாத்திரத்திற்கு நிறைய ரசிகர் கூட்டம் இருக்கிறது.

இதில் கண்ணம்மாவாக ரோஷ்நி ஹரிப்ரியன் நடிக்கிறார். அவருக்கு நிறைய ரசிகர்கள் இருக்கின்றனர். முன்னதாக ரோஷினி ஹரிப்ரியன் நிறைய யூடியூப் குறும்படங்கள் மற்றும் விளம்பரங்களில் நடித்து இருக்கிறார்.

அப்போதெல்லாம் கிடைக்காத புகழ் அவருக்கு விஜய் டிவியின் மூலமாகத்தான் கிடைத்தது. இந்த நிலையில் தற்போது ரோஷினி தனக்கு கதாநாயகி ஆகும் வாய்ப்பு கிடைத்துள்ளதாகவும், எனவே அவர் கண்ணம்மா சீரியல் விட்டு விலகி விட்டதாகவும் கூறப்பட்டது.‌ இத்தகைய நிலையில் இந்த சீரியலில் கண்ணம்மா கதாபாத்திரத்தை ரிப்லேஸ் செய்ய பிரபல மாடல் அழகி வினுஷா தேவி வந்துள்ளார்.

இதற்கான புரோமோ வீடியோ சமீபத்தில் வெளியாகியது. இதனை தொடர்ந்து தற்போது ரோஷினி ஹரிப்ரியன் தமிழ் ரசிகர்களுக்கு ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் தவிர்க்க முடியாத சில காரணங்களுக்காக இந்த சீரியலில் இருந்து நான் கிளம்புகிறேன் உங்களுடைய அன்புக்கு நன்றி. என்று தெரிவித்துள்ளார்.

“கொழும்பு தமிழின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/colombotamil

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் கொழும்பு தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Get the latest Tamil news here. You can also read all the news by following us on Twitter, Facebook and Telegram.

Leave a Reply