
தமிழ் சினிமாவில் பிரபல நடிகரான தளபதி விஜய் தற்போது இயக்குனர் நெல்சன் டிலிப்குமர் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜாவுக்கு நடிக்கிறார்.
மேலும், இந்த படத்தில் செல்வராகவன், யோகி பாபு, ஜான் விஜய், அபர்ணா தாஸ், விடிவி கணேஷ் உள்ளிட்ட திரைப்படங்கள் பலரும் நடிக்கின்றனர்.
இந்நிலையில் கடந்த 2004ம் ஆண்டு இயக்குனர் தரணி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வெளியான திரைப்படம் கில்லி. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை திரிஷா நடித்திருந்தார். மேலும், இந்த படத்தில் பிரகாஷ்ராஜ், மயில்சாமி உள்ளிட்ட திரை பிரபலங்கள் பலரும் நடித்திருந்தனர்.
இந்தத் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. மேலும், இந்த திரைப்படம் தளபதி விஜயின் சினிமா வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கில்லி படத்தில் முதலில் ஹீரோவாக தல அஜித் நடிக்க இருந்ததாக கூறப்படுகிறது. அதன் பிறகு ஒரு சில காரணங்களால் தல அஜித்தால் இந்த படத்தில் நடிக்க முடியாததால் தளபதி விஜய் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.
“கொழும்பு தமிழின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/colombotamil
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் கொழும்பு தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Get the latest Tamil news here. You can also read all the news by following us on Twitter, Facebook and Telegram.





