கடந்ந 2020ம் ஆண்டு நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையில் அகில இலங்கை ரீதியில் முதல் 10 மாணவர்களில் ஒருவராக, திருகோணமலை ஸ்ரீ சண்முக இந்து மகளிர் கல்லூரி மாணவி செல்வி துளஸ்வினி விமல்ராஜ் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சாதனை மாணவிக்கான கௌரவிப்பு, விருது வழங்கல் நிகழ்வு எதிர்வரும் 22.11.2021 ம் திகதி இசுருபாய கல்வி அமைச்சில் வழங்கப்படவுள்ளது.
திருகோணமலை மண்ணிற்கு பெருமையீட்டித்தந்த குறித்த மாணவிக்கு, மக்கள் பலர் தமது நல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.






