உள்ளூராட்சி மன்றங்களின் ஆயுட்காலம் மேலும் நீடிக்கும்!

இலங்கையில் உள்ள அனைத்து உள்ளூராட்சி மன்றங்களின் ஆயுள் காலம்
மேலும் ஓர் ஆண்டுகளிற்கு நீடிக்கும் வர்த்தமானி அறிவித்தல் டிசம்பர் 6ஆம் திகதி வெளிவரவுள்ளது.

உள்ளூராட்சி மன்றங்களின் ஆயுள் காலம் எதிர்வரும் பெப்ரவரி மாதத்துடன் சகல உள்ளூராட்சி சபைகளின் ஆயுள் காலம் நிறைவு பெறவுள்ளது.

இருந்தபோதும் உடனடியாக தேர்தல் ஒன்றிற்கு செல்லும் நிலையில் அரசு இல்லாத காரணத்தினால் மேலும் ஓர் ஆண்டிற்கு நீடிக்கும் முடிவிற்கு அரசு சென்றுள்ளது.

இதன் காரணத்தினால் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களிற்கான ஆண்டு ஒண்டிற்கான கொடுப்பனவிற்கு தேவையான 40 கோடி ரூபா 2022ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்திலும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதேநேரம் எதிர் காலத்தில் கிராமங்களில் அரசிற்கான ஆதரவைத் திரட்டும் நோக்கில் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களிற்கும் தலா 40 லட்சம் ரூபா நிதி ஒதுக்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply