ஏடிபி பைனல்ஸ்: டேனில் மெட்வேடவ் அரையிறுதிக்கு முன்னேற்றம்!

ஆண்களுக்கே உரித்தான ஏடிபி பைனல்ஸ் டென்னிஸ் தொடரின், குழுநிலைப் போட்டியில் வெற்றிபெற்று ரஷ்யாவின் டேனில் மெட்வேடவ் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

இன்று (வெள்ளிக்கிழமை) ரெட் குழுவில் நடைபெற்ற போட்டியில், ரஷ்யாவின் டேனில் மெட்வேடவ்வும் இத்தாலியின் ஜென்னிக் சின்னரும் மோதினர்.

பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில், முதல் செட்டை 6-0 என்ற கணக்கில் டேனில் மெட்வேடவ் எளிதாக கைப்பற்றினார்.

இதனைத்தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது செட்டில், சிறப்பாக விளையாடிய ஜென்னிக் சின்னர், டேனில் மெட்வேடவ்வுக்கு கடும் நெருக்கடி கொடுத்தார்.

இதனால் செட் டை பிரேக் வரை நகர்ந்தது. இதில் சிறப்பாக விளையாடிய ஜென்னிக் சின்னர், செட்டை 7-6 என கைப்பற்றி பதிலடி கொடுத்தார்.

இருவரும் தலா ஒரு செட்டைக் கைப்பற்றியதால், வெற்றியை தீர்மானிக்கும் மூன்றாவது செட் பரபரப்படைந்தது.

இதில் இருவரும் விட்டுக்கொடுக்காமல் சிறப்பாக விளையாடிதால், செட் டை பிரேக் வரை நீண்டது. ஆனால் இறுதிவரை போராடிய டேனில் மெட்வேடவ், செட்டை 7-6 என கைப்பற்றி அரையிறுதிக்கு முன்னேறினார்.

Leave a Reply