<!–
நீண்ட காலமாக உரிய மருத்துவ வசதிகள் இன்றி தவித்து வந்த திருகோணமலை குச்சவெளி பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட தென்னமரவாடி கிராமத்தில் ஆரம்ப பராமரிப்பு சுகாதார வைத்திய நிலையம் திறந்துவைக்கப்பட்டது.
சர்வதேச மருத்துவ சுகாதார அமைப்பின் நிதியுதவியுடன், சுகாதார திணைக்களத்தின் ஒத்துழைப்புடன் அமைக்கப்பட்ட, “ஆரம்ப பராமரிப்பு சுகாதார வைத்திய நிலையம்” இணை, மாவட்ட அரசாங்க அதிபர் சமன் தர்சன பாண்டி கோறள மற்றும் திருகோணமலை மறை.மாவட்ட ஆயர் நோயல் இம்மானுவல் ஆண்டகையினால் உத்தியோகபூர்வமாக மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது.
குறித்த கிராமம் தொடர்பில் ஆதவன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான திசைகள் ஆவணத்தொகுப்பில் வெளிப்படுத்தப்பட்ட நிலையில், அதனை பார்வையிட்ட புலம்பெயர்வாழ் தமிழர்களது நிதியுதவியில் குறித்த கட்டமானது கட்டப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.






