உள்ளூராட்சி விவாத போட்டியில் முதலாம் இடத்தை பெற்ற மானிப்பாய் அணி

இலங்கையிலுள்ள உள்ளூராட்சி மன்றங்களுக்கு இடையிலான தமிழ் மொழி மூலமான விவாத போட்டியில் அகில இலங்கை ரீதியில் முதலாம் இடத்தினை, வலிகாமம் தென்மேற்கு – மானிப்பாய் பிரதேச சபையின் விவாத அணி பெற்றுக்கொண்டுள்ளது.

இரண்டாமிடத்தினை மட்டக்களப்பு – மண்முனைப்பற்று பிரதேசசபை பெற்றதுடன் மூன்றாமிடத்தினை, புதுக்குடியிருப்பு பிரதேசபை பெற்றுக்கொண்டது.

அத்துடன், அணியின் தலைவராக உறுப்பினர் கந்தையா ஜெசிதன் செயற்பட்டிருந்தார்.

இதன்போது, முதலாமிடத்தை பெற்றுக்கொண்ட மானிப்பாய் பிரதேசசபையின் விவாதகுழுவில்
தவிசாளர் அந்தோனிப்பிள்ளை ஜெபநேசன் உறுப்பினர்களான அருட்குமார் ஜோன் ஜிப்பிரிக்கோ,
கந்தையா ஜெசிதன் , லோகப்பிரகாசம் ரமணன் , சிவசண்முகநாதன் அனுசன் உள்ளிட்டவர்கள் பங்குபற்றியிருந்தனர்.

Leave a Reply