கனமழை, வெள்ளம் – சபரிமலையில் பக்தர்களுக்குத் தடை!

<!–

கனமழை, வெள்ளம் – சபரிமலையில் பக்தர்களுக்குத் தடை! – Athavan News

பம்பை ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக சபரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு மாவட்ட ஆட்சியர் தடை விதித்துள்ளார்.

கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால் பம்பை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக சபரிமலைக்கு செல்ல பக்தர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மழை வெள்ளம் குறைந்த பிறகு அனுமதி வழங்கப்படும் என்றும் ஆன்லைனில் முன்பதிவு செய்த பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என பத்தினம்திட்டா மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


Leave a Reply