பங்களாதேஷ் அணியினை வீழ்த்தியது ஆப்கானிஸ்தான்!

ஆசிய கிண்ண கிரிக்கட் போட்டியின் நேற்றைய போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 7 விக்கட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.

போட்டியின் முதலில் துடுப்பாடிய பங்களாதேஸ் அணி, 20 ஓவர்களில் 7 விக்கட் இழப்பிற்கு 127 ஓட்டங்களை பெற்றது.

மொஸாடக் ஹூசைன் 48 ஆட்டமிழக்காமல் ஓட்டங்களை பெற்றுக்கொடுத்திருந்தார்.

பந்து வீச்சில் முஜீப் உர் ரஹ்மான் மற்றும் ரஸீட் கான் ஆகியோர் தலா மூன்று விக்கட்டுக்களை கைப்பற்றினர்.

இதனைத் தொடர்ந்து 128 என்ற வெற்றியிலக்கினை நோக்கி துடுப்பாடிய ஆப்கானிஸ்தான் அணி, 18.3 ஓவர்கள் நிறைவில் 131 ஓட்டங்களை பெற்று வெற்றி பெற்றுள்ளது.

நஜிபுல்லாஹ் சட்ரான் 17 பந்துகளில் 43 ஓட்டங்களையும் இப்ராஹிம் சட்ரான் 42 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

இந்த வெற்றியின் ஊடாக சுப்பர் 4 சுற்றுக்குள் ஆப்கானிஸ்தான் அணி முதல் அணியாக முன்னேறியுள்ளது.

Leave a Reply