தமிழகத்தில் 10ஆவது மெகா கொரோனா தடுப்பூசி முகாம் இன்று

தமிழகத்தில் 10வது மெகா கொரோனா தடுப்பூசி முகாம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது.

தடுப்பூசியின் இரண்டாவது டோஸைப் பெறாத 71 இலட்சம் பேர் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

தமிழகத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு, தற்போது கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

குறிப்பான வியாழக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை என, வாரத்தில் இரண்டு நாட்டகள் மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படுகின்றன.

அதற்கமைய 10வது மெகா தடுப்பூசி முகாம், தமிழகம் முழுதும் 50 ஆயிரம் மையங்களில் இன்று நடைபெறுகிறது.

Leave a Reply