குருதி ஆறு மீண்டும் ஓடுவதற்கே போர் வெற்றித் தூபி திறப்பு!

உலக நாடுகளில் போர் நினைவுத்தூபிகளை அகற்றி அன்பை வளர்க்கும் சூழலில், இங்கு போர் நினைவு சின்னங்களை உருவாக்கி இன விரோதத்தையும், கோபத்தையும் உருவாக்கவே அரசு முயற்சிக்கின்றது, நாட்டில் போரோ அல்லது இன முரண்பாடுகளோ இல்லை என்பதே அரசுக்கு இருக்கும் பிரச்சினையாகும். குருதிக் கறையை மீண்டும் பார்க்கும் மனநிலையை உருவாக்கவே இவர்கள் முயற்சிக்கின்றனர் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி குமாரி கவிரத்ன தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை, வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது, ‘சமூக அபிவிருத்தியை விட பாதுகாப்பு படைகளின் தேவைக்காக அதிக நிதி ஒதுக்கப்படும் என்றால் அது மரணத்தை நெருங்கும்’ என மார்டின் லூதர் கிங் கூறியுள்ளார். இந்த வாக்கியங்களை ராஜபக்ச அரசு சரியென நிருபித்து வருகின்றது.
தேசிய பாதுகாப்பு அவசியமே, ஆனால் அவை மூன்று அடிப்படை காரணிகளில் தங்கியுள்ளது, அரசியல் சுதந்திரத்தை பாதுகாத்தல், சுதந்திர தேச எல்லையை பாதுகாக்க வேண்டும், தேசிய இருப்பிடத்தை பாதுகாத்தல். ஆனால் இந்த மூன்றையும் அரசு பாதுகாக்கவில்லை.
உதாராணமாக கூறுவதென்றால், எதிர்க்கட்சிகளின் ஜனநாயக போராட்டத்தை கொவிட் காரணங்களை கூறி தடுக்கும் அரசு, சந்தவிருசாயவில் கூட்டம் போடுகின்றது, என்றார்.

Leave a Reply