கொத்து ரொட்டியின் விலை ரூ.100 ஆல் அதிகரிப்பு

கொழும்பு, செப். 5:

கோதுமை மாவின் விலை அதிகரிப்பு காரணமாக உணவகங்களில் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக சிற்றுணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதன்படி, கொத்து ரொட்டி ஒன்றின் விலை 100 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

முட்டை ரொட்டி, பராட்டா, மரக்கறி ரொட்டி மற்றும் ரோல்ஸ் உள்ளிட்ட சிற்றுணவுகளின் விலைகள் 10 முதல் 20 ரூபாவுக்கு இடைப்பட்ட அளவில் அதிகரிகக்கப்பட்டுள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.

Leave a Reply