மன்னாரில் டைனமோட் வெடிபொருட்களுடன் இருவர் கைது

இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டு வரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ஒரு தொகை டைனமோட் வெடிபொருட்கள் நேற்று மாலை, மன்னார் சாந்திபுரம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் மீட்கப்பட்டுள்ளதோடு, இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கடற்படையினரின் தகவலைத் தொடர்ந்து மன்னார் பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகர் தலைமையில் சென்ற பொலிஸ் குழுவினர் குறித்த டைனமோட் வெடி பொருட்களை கைப்பற்றியுள்ளனர்.

சாந்திபுரத்தில் உள்ள ஒரு வீட்டை முற்றுகையிட்டு சோதனை செய்த வேளையில், 998 கிலோ கிராம் எடையுள்ள வெடி பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக இப்பகுதிக்கு கடத்தி வரப்படுவதாக சந்தேகிக்கப்படும் இவ் வெடிபொருள் மீன் பிடிக்க பாவிக்கப்படும் வெடி பொருள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சம்பவம் தொடர்பாக சாந்திபுரம் மற்றும் வங்காலை பகுதிகளைச் சேர்ந்த இருவரே கைது செய்யப்பட்டுள்ளனர்.

வலி.கிழக்குப் பிரதேச சபை தவிசாளர், உப தவிசாளருக்கு மல்லாகம் நீதிமன்றம் அழைப்புக் கட்டளை!

Leave a Reply