நாளாந்தம் ஒரு இலட்சம் சிலிண்டர்களை சந்தைகளில் விநியோகிக்க அதற்குரிய நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், சீமெந்து மூடைகளுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடுக்கு அரசாங்கம் விரைவில் முடிவுகட்டும் எனவும் இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.
அதன்படி சமையல் எரிவாயு, சீமெந்து ஆகிய பொருள்களுக்கு சந்தைகளில் ஏற்பட்டுள்ள தட்டுப்பாடுக்கு அடுத்த ஓரிரு வாரங்கள் சரி செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.
சீமெந்து மூடைகளுக்கான தட்டுப்பாடுகள் நீங்கியதும் 50 கிலோகிராம் சீமெந்து மூடை ஒன்றை 1,275 ரூபாய்க்கு கொள்வனவு செய்ய முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.






