வவுனியாவில் இவ்வருடம் ஜனவரி முதல் ஓகஸ்ட் வரையான காலப்பகுதியில் 931.2 மில்லி மீற்றர் அதிக மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக மாவட்ட வளிமண்டல நிலைய பொறுப்பதிகாரி தா.சதானந்தன் தெரிவித்துள்ளார்.
இவ்வருடம் 2022 ஜனவரி முதலாம் திகதியிருந்து ஓகஸ்ட் மாதம் 31 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் 931.2 மில்லி மீற்றர் அதிக மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதுடன் குறித்த காலப்பகுதியில் ஏப்ரல் மாதம் 356.4 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியே அதிக மழைவீழ்ச்சியாக பதியப்பட்டுள்ளது.
கடந்த வருடம் 2021 ஆம் ஆண்டு ஜனவரி தொடக்கம் ஓகஸ்ட் வரையான காலப்பகுதியில் பெய்த மழைவீழ்ச்சி 667.1 மில்லிமீற்றராக காணப்பட்டுள்ளது. இருப்பினும் கடந்த வருடம் குறிப்பிட்ட காலப்பகுதியில் ஒப்பிடும் போது கடந்த வருடத்தை விட இவ்வருடமே அதிக மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.
கடந்த வருடம் குறிப்பிட்ட காலப்பகுதியில் மட்டுமே மழை பெய்ததாகவும் ஆனால் இந்த வருடம் தொடரான மழை வீழ்ச்சி காணப்பட்டதாலும் குறிப்பிட்ட காலப்பகுதியில் அதிக மழைவீழ்ச்சி பதிவாகியிருந்தது.
இனிவரும் காலப்பகுதியில் பெய்யும் மழை சாதாரண மழையாகவே காணப்படும். நவம்பர் , டிசம்பர் மாதங்களில் மழை அதிகமாக காணப்பட்டாலும் சராசரி மழைவீழ்ச்சியாகவே காணப்படும் என மாவட்ட வளிமண்டல நிலைய பொறுப்பதிகாரி தா.சதானந்தன் மேலும் தெரிவித்துள்ளார் .
பிற செய்திகள்
- உணவிற்கு அல்லாடும் மக்கள்; தப்பியோடிய கோட்டாவுக்கு அதி பயங்கர பாதுகாப்பு! – மரிக்கார் குற்றச்சாட்டு
- இலங்கை இரண்டாக பிளவுபடும் அபாயம்! மனோ எச்சரிக்கை
- புலம்பெயர் இலங்கை தொழிலாளருக்கு அள்ளிவீசப்படும் சலுகைகள்!
- ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே கொலையின் பின்னணியில் ராஜபக்சர்கள்! – வெளியான தகவல்
- புதிய பயணத்தை ஆரம்பிக்க 76வது ஆண்டு நிறைவில் ஐக்கிய தேசிய கட்சி அழைப்பு
- Facebook:https://www.facebook.com/samugamweb
- Instagram:https://www.instagram.com/samugammedia/
- Twitter:https://twitter.com/samugammedia
- Youtube:https://www.youtube.com/c/SamugamNewsSrilanka