புதிய ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்றதைத் தொடர்ந்து நாட்டில் பல்வேறு மாற்றங்கள் இடம்பெற்று வருகின்றது.
இவ்வாறானநிலையில் தற்போது வடமாகாண ஆளுனர் பதவியிலும் விரைவில் மாற்றங்கள் ஏற்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அந்தவகையில் யாழ்ப்பாணம் ஆழ்வார் தேவஸ்தானத்தின் தலைவர் சட்டத்தரணி விஷ்ணுகாந்தன் என்பவரே நியமிக்கப்பட்டுள்ளதாக தென்னிலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் அவருக்கான பதவிப் பிரமாணம் ஒருசில நாட்களில் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பிற செய்திகள்