மீரிகம நகரில் நபர் ஒருவரை கூரிய ஆயுதத்தால் தாக்கி 15 இலட்சம் ரூபா பணம் மற்றும் காரை கொள்ளையடித்த சம்பவம் தொடர்பில் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 38 மற்றும் 44 வயதுடைய கலேலியா மற்றும் மீரிகம பிரதேசத்தை சேர்ந்தவர்கள்.
சந்தேகநபர்கள் நால்வரும் இன்று (செப்.6) அத்தனகல்ல நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.
நான்கு சந்தேக நபர்களில் இருவர் திருடப்பட்ட காருடன் ஆகஸ்ட் 29 அன்று கைது செய்யப்பட்டு செப்டம்பர் 8 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மீரிகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
பிற செய்திகள்