தமிழ் சினிமாவில் கடந்த சில வருடங்களாக சூப்பரான படங்களை கொடுத்து ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார் நடிகர் சூர்யா. சூரரைப்போற்று, ஜெய் பீம் படத்தை தொடர்ந்து வாடிவாசல் படம் மூலம் இன்னொரு ஹிட் கொடுக்க இருக்கிறார்.
இப்படம் குறித்து ஒவ்வொரு நாளும் ஸ்பெஷலான விஷயங்கள் வந்து கொண்டிருக்கின்றன.
ஹீரோவாக கலக்கும் சூர்யா கமல்ஹாசனின் விக்ரம் படத்தில் ரோலக்ஸ், மாதவன் இயக்கிய ராக்கெட்ரி படத்தில் சின்ன வேடம், சூரரைப் போற்று ஹிந்தி ரீமேக்கில் சின்ன ரோல் என மற்றவர்களின் படங்களிலும் நடித்து வருகிறார் சூர்யா.
பிரபாஸ் பாகுபலி படத்திற்கு பிறகு பான் இந்தியன் நாயகனாக மாறிவிட்டார், அவரை வைத்து பெரிய பட்ஜெட் படங்களை இயக்க தான் இயக்குனர்கள் ஆசைப்படுகிறார்கள்.
தற்போது Project K என தற்சமயம் பெயர் வைத்துள்ள பிரபாஸ் நடிக்கும் புதிய படம் குறித்து தகவல் வந்துள்ளது. நாக் அஸ்வின் இயக்கும் இப்படம் தெலுங்கு மற்றும் ஹிந்தியில் படமாக்கப்படுகிறது.
பிரபாஸை தாண்டி பான் இந்தியன் படம் என்பதால் அமிதாப் பச்சன், தீபிகா படுகோனே, திஷா படானி, மகேஷ் பாபு, துல்கர் சல்மான் என ஒவ்வொரு மொழியில் இருந்து பிரபலங்கள் இதில் நடிக்கிறார்கள்.
தமிழில் தற்போது சூர்யா இப்படத்தில் நடிக்க கமிட்டாகி இருப்பதாக கூறப்படுகிறது. ரோலக்ஸ் போல இப்படத்தில் அவருக்கு வெயிட்டான வேடம் என்கின்றனர்.
ரூ. 500 கோடி பட்ஜெட்டில் தயாராகும் இப்படத்தில் சூர்யா நடிப்பதாக வந்துள்ள தகவல் ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.