சர்வதேச நாணய நிதியத்துடன் எட்டப்பட்ட ஊழியர் மட்ட உடன்படிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று சபாநாயகரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இன்றைய தினம் பாராளுமன்ற அமர்வு காலை 09.30 மணியளவில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் ஆரம்பமானது.
இதன்போதே இவ்வாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தின் நிதி அதிகாரங்களை மையப்படுத்தி இந்த ஒப்பந்தத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும் எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டிருந்தார்.
தயவுசெய்து சர்வதேச நாணய நிதியத்துடனான பணியாளர் ஒப்பந்தத்தை முன்வைக்கவும்.
அப்போது நாமும் நாடும் அந்த ஒப்பந்தத்தின் உள்ளடக்கத்தைப் பற்றி ஓரளவு புரிந்து கொள்ள முடியும்.
மேலும், அதில் உள்ளதை குறிப்பிடவும், நாட்டுக்காக மிகவும் முற்போக்கான நடவடிக்கைகள் குறித்த எங்கள் கருத்தையும் முன்வைக்க முடியும்.- என்றார்.
பிற செய்திகள்