கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலாவி தெற்கு பகுதியைச் சேர்ந்த 75 வயதான முதியவர் ஒருவர் நேற்று திங்கட்கிழமை காலை தூக்கிட்ட நிலையில் காப்பாற்றப்பட்டு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.
குறித்த முதியவர் வீட்டில் தூக்கிடுவதை வீட்டிலிருந்தோர் கண்டதையடுத்து தூக்குக் கயிறை அறுத்து முதியவரை மீட்டு சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றனர். எனினும் முதியவர் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் பிரேதப் பரிசோதனை மற்றும் மரண விசாரணைகளுக்காக சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
பிற செய்திகள்