வறுமை என்னும் ஒற்றைச்சொல்லால் கல்வியை யாரும் இழக்க அனுமதிக்க முடியாது!

வறுமை என்னும் ஒற்றைச்சொல்லால் கல்வியை யாரும் இழக்க அனுமதிக்க முடியாது உடற்கல்வி டிப்ளோமா ஆசிரிய சங்கத்தின் தலைவர் ப.தர்மகுமாரன்தெரிவித்தார்.

கல்விக்கு குரல் கொடுப்போம் கற்றலை மேம்படுத்துவோம் என்னும் சங்கத்தின் குறிக்கோளுடன் தெரிவு செய்யப்பட்ட எழுபது மாணவர்களுக்கான கற்றல் உபகரணம் வழங்கும் நிகழ்வில் உரையாற்றிய சங்கத்தின் தலைவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

கல்வியே தமிழரின் மூலதனம், அதனை யாராலும் அழித்துவிட முடியாது. ஏனெனில் தமிழினத்தின் வளர்ச்சிக்கும் எழுச்சிக்கும் ஒழுக்கத்திற்க்கும் கல்வியே வித்திட்டது.

இன்றைய காலப்பகுதியில் பொருளாதார பிரச்சனை, வறுமை எனக்கூறி மாணவர்கள் கல்வியில் இருந்து இடைவிலகும் அவல நிலை தோன்றியுள்ளது.

இதனை அனுமதிக்கமுடியாது. கல்வி அறிவை இழப்பவன் நாகரீகத்தை இழக்கிறான். நாகரீகத்தை தொலைத்தவன் சமூகத்தை சிதைக்கிறான்.

எனவே கல்வியை இழப்பதற்க்கு எமது சங்கம் ஒரு போதும் இடமளியாது. அதற்க்கு எமது உறவுகள், புலம்பெயர் நாடுகளில் இருந்து நிதியினை வாரி வழங்குகின்றனர்.

ஆனால் அது சரியான இடத்தில் சரியான நபருக்கு போய் சேருகின்றதா? என்பது கேள்விக்குரிய விடயமாகவே உள்ளது.

எனவே நம்பகத்தன்மை கொண்டு நடுவுநிலமையாக பகிர்ந்து கொடுத்து உதவ வேண்டும், எனிவரும் காலம் தமிழருக்கானது.

அந்தக்காலம் வெகுவிரைவில் உருவாகும். ஏனெனில் எமது உறவுகள் புலம்பெயர் நாட்டில் இருந்து கொண்டே பல்வேறு திட்டங்களை கல்விக்கும் விளையாட்டுக்கும் ஆற்றவுள்ளனர்.

அதற்கான சிறந்த திட்டங்களை ஒற்றுமையாக செயற்படுத்த அனைவரும் ஒன்றுதிரள வேண்டும் என சங்கத்தின் தலைவர் ப.தர்மகுமாரன் கேட்டுக்கொண்டார்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *