கொழும்பு, செப் 5
மீட்டர் பொருத்தப்பட்டுள்ள முச்சக்கர வண்டிகளுக்கு தனியான எரிபொருள் கோட்டா வழங்குவது தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இதனை மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இன்று செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
எரிபொருள் நிரப்பு நிலையங்களினால் வழங்கப்படும் எண்ணெய் ஒதுக்கீட்டிற்கு மேலதிகமாக அதே எரிபொருள் ஒதுக்கீடு வழங்க எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.