கொழும்பு, செப் 6
களுத்துறை பிரதேசத்தில் கரைவலைத் தொழிலில் ஈடுபட்டு வருகின்ற இரண்டு தரப்புக்களிடையே நிலவி வருகின்ற தொழில்சார் முரண்பாடுகள் தொடர்பாக அவதானம் செலுத்திய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, சம்மந்தப்பட்ட தரப்புக்களை வரவழைத்து கலந்துரையாடினார்.
இதன்போது, இரண்டு தரப்புக்களினதும் கருத்துக்களையும்்கேட்டறிந்த கடற்றொழில் அமைச்சர், சம்மந்தப்பட்ட பிதேசத்தில் எத்தனை கரைவலைத் தொழிலை மேற்கொள்வதற்கான சாதகத் தன்மைகள் இருக்கின்றன என்பதை ஆராய்ந்து, எந்தத் தரப்பினரையும் பாதிக்காத வகையில் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார். – 06.09.2022