ஐரோப்பிய நாடொன்றில் வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாக பல மில்லியன் ரூபா மோசடி செய்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
ருமேனியாவில் வேலை பெற்றுத் தருவதாகக் கூறி பலரிடம் பண மோசடி செய்த பெண்ணை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசேட புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
குறித்த பெண் வழங்கிய உறுதிமொழிக்கு அமைய வேலையை பெற்றுத்தரவில்லை என பல முறைப்பாடுகள் பணியகத்தின் விசேட புலனாய்வுப் பிரிவிற்கு கிடைத்துள்ளன.
இதனையடுத்து மேற்கொண்ட விசாரணையின் காரணமாக இராஜகிரியவில் நிறுவனத்தை நடத்தி வந்த நிசிகா சமன்மலி சமரவீர என்ற சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை குறித்த நிறுவனத்திலிருந்து 23 வெளிநாட்டு கடவுச்சீட்டுகள் மற்றும் பல ரோமானிய வேலை விண்ணப்பங்களை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளதாக தெரியவருகிறது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இதற்கு முன்னர் இதே போன்ற குற்றங்களுக்காக நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்டவர் என்பது மேலதிக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
பிற செய்திகள்