நாட்டில் ஏற்பட்டுள்ள கோதுமை மா தட்டுப்பாட்டுக்கு தற்போதைய வர்த்தக அமைச்சரே பொறுப்பேற்க வேண்டும் என அநுராதபுரம் மாவட்ட உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
கோதுமை மாவுக்கு தட்டுப்பாடு ஏற்படுவதற்கு முன்னரே வர்த்தக அமைச்சர் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.
தட்டுப்பாடு ஏற்பட்ட பின்னர் நடவடிக்கை எடுப்பது சந்தேகம் என சங்கத்தின் தலைவர் இந்திக அனுரகுமார குறிப்பிடுகின்றார்.
கமிஷன் வாங்கிய தொழிலதிபர்களிடம் இருந்து தட்டுப்பாடு வரும் வரை அமைச்சர் காத்திருக்கிறாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது என்றார்.
தற்போது ஏற்பட்டுள்ள மாவுத் தட்டுப்பாட்டின் காரணமாக ஒரு இறாத்தல் பாண் முந்நூறு ரூபாவுக்கு மேல் விலை போகலாம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
பிற செய்திகள்