நாட்டைத் திவாலாக்கியவர்களைக் கண்டறிய குழு ஒன்றை நியமிக்குமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா தெரிவித்தார்.
அதேவேளை, இரண்டரை வருடங்களுக்குள் பொருளாதாரத்தை அழித்தவர்கள் யார் என்பதைக் கண்டறிய நாடாளுமன்ற தெரிவுக்குழுவொன்றை நியமிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் நெருக்கடி தொடர்பில் கருத்து வெளியிடுகையில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், “அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் நியமிக்கப்படும் போது நாடாளுமன்றத்தில் உள்ள 225 பேர் மகிழ்ச்சியடைந்தாலும் 22 மில்லியன் மக்கள் மீதே சுமை சுமத்தப்படுகிறது.
இதனால், மட்டுப்படுத்தப்பட்ட அமைச்சரவையை நியமித்து, நாட்டை சரியான பாதையில் கொண்டு செல்ல வேண்டும்.
22 மில்லியன் மக்களின் வாழ்க்கைச் செலவைக் குறைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்” என்றார்.
[embedded content]