இலங்கையில் பிள்ளைகள் மற்றும் தாய்மாரின் மந்தபோசணை தொடர்பாக யுனிசெப் நிறுவனம் வெளியிட்டிருக்கும் அறிக்கை தொடர்பில் இரண்டுநாள் விவாதம் நாடாளுமன்றத்தில் இனறு (6) நாளை (7) இடம்பெற இருக்கின்றது.
விவாதம் தொடர்பான பிரேரணை ஐக்கிய மக்கள் சக்தியினால் முன்வைக்கப்படும்.
நாடாளுமன்றம் இனறு (6) இன்று முதல் எதிவரும் 9 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை கூடுவதற்கு நாடாளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பான குழு தீர்மானித்துள்ளதாக நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தெரிவித்தார்.
அதன் பிரகாரம் சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரி சட்டமூலம் மற்றும் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி (நிர்வாகம்) சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் இனறு (6) காலை 10.30 இல் இருந்து 10.45ம ணி வரை சமர்ப்பித்து, விவாதிக்காமல் அனுமதித்துக்கொள்ள இருக்கின்றது.
அத்துடன் வருட மத்தியில் அரச நிதி நிலைமை தொடர்பான அறிக்கை (2022 வருடத்துக்கான) தொடர்பில் சபை ஒத்திவைப்பு வேளை விவாதம் எதிர்வரும் 8 ஆம் திகதி நடத்த இருக்கின்றது.
நாட்டில் மே மாதம் இடம்பெற்ற கலவரத்தின்போது நிட்டம்புவ பிரதேசத்தில் வைத்து கொலை செய்யப்பட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அதுகோரள தொடர்பான அனுதாப பிரேரணை 9 ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் செயலாளர் நாயகம் தெரிவித்தார்.