பெரும்பான்மை இனத்தின் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு நிச்சயமாக செவி சாய்க்காது என ஈ.பி.ஆர்.எல்.எப்.இன் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
யாழில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
யார் ஆட்சிக்கு வந்தாலும்,சிங்கள பௌத்த பேரினவாதத்தை முன் நிறுத்தியே ஆட்சி பீடம் ஏறுவார்கள்.இதனால் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு செவி சாய்க்க மாட்டார்கள்.ஆகவே தற்போது உள்ள ஜனாதிபதியால் ஒரு துரும்பை கூட அசைக்க முடியாது என்று நான் நினைக்கின்றேன்.
ரணில் தொடர்ச்சியாக் பதவியில் இருக்க வேண்டுமானால் ராஜ பக்சாக்கள் சொல்வதை செய்தே ஆக வேண்டும்.கை பொம்மையாகவே அவர் இருப்பார்.ஆகவே ரணிலால் சுயமாக ஒன்றுமே செய்ய முடியாது.ஆனால் தமிழ் மக்களை பேக்காட்டுவதற்கு சில வேலைகளை இவர்கள் செய்வார்கள்.
புலம்பெயர் தமிழர்களுடன் பேசுவோம் என்று சொல்வார்கள்,தமிழகத்தில் இருந்து அகதிகளை இங்கே கொண்டு அழைத்து வருவோம் போன்ற செயற்பாடுகளை செய்வதாகக் கூறி எம்மை ஏமாற்றுவார்கள் என்றார்.