தென்னாப்பிரிக்கா,செப் 06
ICC இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடருக்கான 15பேர் கொண்ட தென்னாப்பிரிக்கா அணி குழாம் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை இதனை அறிவித்துள்ளது.
இதன்படி Temba Bavuma தலைமையிலான குறித்த குழாமில் Quinton De Kock,Reeza Hendricks, David miller, Kagiso Rabada உள்ளிட்ட முன்னணி வீரர்களும் பெயரிடப்பட்டுள்ளனர்.
அத்துடன் Tristan Stubbs உலகக் கிண்ண தொடரில் தன்னுடைய அறிமுகத்தை பெறவுள்ள நிலையில் Rassie van der Dussen காயம் காரணமாக நீக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.