கொழும்பு, செப். 6: ராஜபக்சவினரின் செயற்பாடுகளே நாடு எதிர்கொள்ளும் நெருக்கடி நிலைக்கு காரணம் என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடந்த நிகழ்வு ஒன்றில் உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில் “ராஜபக்சர்கள் மாத்திரமல்ல, அவர்களைச் சுற்றியிருக்கும் அரசாங்கப் பிரதிநிதிகள், நண்பர்கள், கூட்டாளிகளும் நாட்டில் நிலவும் நெருக்கடிகளுக்குக் காரணமாகும்.
2005 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த ராஜபக்சவினர் இந்த நாட்டையும் அதன் சொத்துக்களையும் தமக்கு சொந்தம் என நினைத்தனர்.
அவர்கள் தாம் விரும்பும் விதத்தில் செயல்பட முடியும் என்றும், அவர்கள் செய்யும் ஒவ்வொரு மோசமான வேலையிலிருந்தும் தப்பித்துவிடலாம் என்றும் நினைத்தார்கள். அவர்களது ஆட்சிக்கு எதிராக ஆட்சேபனை தெரிவித்தவர்கள் கொல்லப்பட்டனர் என்றும் சந்திரிக்கா சுட்டிக்காட்டினார்.