கிழக்கு மாகாண ஆளுநர் அநுராதா யஹம்பத் அவர்களின் அனுமதியில் ஆளுநர் செயலகத்தினால் அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்திற்கமைய 31 உறுப்பினர்கள் அடங்கிய பட்டியலிற்கமைவாக கலந்து கொண்ட உறுப்பினர்களிலிருந்து மூதூர் தள வைத்தியசாலைக்கான புதிய அபிவிருத்திக் குழு நிருவாக சபை இன்று (06) செவ்வாய்க் கிழமை தெரிவு செய்யப்பட்டது.
மூதூர் தள வைத்தியசாலையின் அத்தியட்சகர் டொக்டர் B.கயல்விழி அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இவ் நிருவாகத் தெரிவு கூட்டத்தில் புதிய நிருவாக சபைக்கு பதவி வழி உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டனர்.
மூதூர் தள வைத்தியசாலையின் புதிய அபிவிருத்திக் குழுவின்செயலாளராக – M.L.பைசர் (சட்டத்தரணி)
உப செயலாளர் – T.ஜெகன் (பிரதேச சபை உறுப்பினர்)பொருளாளர் – M.P.நாஜின் (MSO)இணைத் தலைவர்கள் : N.M.M.கிஷோர் (ஆசிரியர்)K.நவநாதன் (அதிபர்)
உள்ளிட்ட பதவி நிலை உறுப்பினர்களோடு 31 பேர் அடங்கிய நிருவாக சபை தெரிவு செய்யப்பட்டது.
இக் கூட்டத்தில் மூதூர் பிரதேச சபை தவிசாளர் M.M.A.அறூஸ் மற்றும் புதிய நிருவாக சபை உறுப்பினர்களும் கலந்து சிறப்பித்தனர்.
பிற செய்திகள்