இலங்கை,செப் 06
ஆசிய கிண்ண ரி20 கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் இலங்கை மற்றும் இந்திய அணிகள் மோதிக் கொள்கின்றன.
போட்டியின் நாணய சுழற்சியை வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச தீர்மானித்துள்ளது.
அதனடிப்படையில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்களை இழந்து 173 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.
துடுப்பாட்டத்தில் இந்திய அணித்தலைவர் ரோஹித் சர்மா அதிகபட்சமாக 72 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார்.
பந்துவீச்சில் இலங்கை அணி சார்ப்பில் தில்ஷான் மதுஷங்க 3 விக்கெட்களையும் சாமிக கருணாரத்ன மற்றும் தசுன் சானக ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் வீழ்த்தியிருந்தனர்.
அதனடிப்படையில் இலங்கை அணிக்கு 174 ஓட்டங்கள் வெற்றியிலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.