கொழும்பு, செப் 7
வௌிநாட்டு வேலைவாய்ப்புகளுக்காக இலங்கையர்களிடம் காணப்படும் ஆர்வம் அதிகரித்து வருவதாக வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 208,772 பேர் வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்து நாட்டிலிருந்து சென்றுள்ளதாக பணியகத்தின் ஊடகப் பேச்சாளர் பிரதி பொதுமுகாமையாளர் காமினி செனரத் யாப்பா தெரிவித்துள்ளார்.
வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் தென் கொரியாவிற்கு 2,885 பேர் சென்றுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.